நடிப்பை விட வேறு ஒரு விடயத்தில் கவனம் செலுத்தும் அஜித்!

நடிப்பை விட வேறு ஒரு விடயத்தில் கவனம் செலுத்தும் அஜித்!
  • PublishedJune 14, 2023

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ள நிலையில், மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே அஜித் பைக் ரைடிங் செய்வதை ஒரு   ஒரு டாக்குமெண்டரியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது அஜித் லண்டன் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே ஏ கே இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஒன்று வைத்திருக்கிறார் அஜித். அவ்வாறு இருக்க அஜித் பியூச்சர் ஃபிலிம்ஸ் எடுப்பது அவரது கனவு இல்லை. மேலும் மற்றவர்கள் செய்தாலும் முடிந்த வரை இவர் வேண்டாம் என்று தான் கூறுவார்.

அவ்வாறு இருக்க தான் மேற்கொள்ளும் பைக் ரைடிங்கை இந்தியாவிலும் மற்றும் உலக அளவில் உற்று நோக்கும் படி  பேசும் படி விஷயங்களை டாக்குமெண்டரி படமாக எடுக்க உள்ளார்.

மேலும் அதை எடுத்து உலக நாடுகளில் நடத்தப்படும் பெஸ்டிவல் நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இது ஒரு பக்கம் மகிழ்ச்சியான செய்தியாக இருப்பினும் மறுபக்கம் எங்கு நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு விடுவாரோ என்ற கவலை ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. தற்பொழுது நடிப்பை விட இதுபோன்ற செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *