அஜித்தின் ‘AK-63″ வெளியானது சூப்பர் அப்டேட்…

அஜித்தின் ‘AK-63″ வெளியானது சூப்பர் அப்டேட்…
  • PublishedMarch 14, 2024

பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’ . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.அஜித்தின் 62 – வது பிரம்மாண்ட படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே-63 படம் குறித்த புது அப்டேட் இன்று இணையதளத்தில் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்.

‘விடுதலை: படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ பட நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஏகே-63 படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்தின் ஏகே-63 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *