GOAT படத்தில் கேமியோ ரோலில் திரிஷா? காத்துவாக்குல கசிந்த சூப்பர் அப்டேட்ஸ்

GOAT படத்தில் கேமியோ ரோலில் திரிஷா? காத்துவாக்குல கசிந்த சூப்பர் அப்டேட்ஸ்
  • PublishedMarch 14, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, பிரபுதேவா, லைலா, பிரசாந்த், அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, மைக் மோகன், பார்வதி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம். அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர்.

இதற்கான பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கோட் படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதன்படி ரஷ்யாவில் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில், கோட் திரைப்படம் பற்றிய சில ஹாட் அப்டேட்டுகள் காத்துவாக்குல கசிந்துள்ளன. அதன்படி இது சயின்ஸ் பிக்சன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறதாம்.

மேலும் இதில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள விஜய், அதில் ஒன்றில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வில்லன் கதாபாத்திரம் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, இப்படத்தில் நடிகை திரிஷாவும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். அவர் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக இருநாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் திரிஷா. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே மங்காத்தா படத்தில் நடித்துள்ள திரிஷா, சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தை இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *