நடிகர் – நடிகைகள் ஈஷா யோகா மையத்தை தேடி வர காரணம் இதுவா?

நடிகர் – நடிகைகள் ஈஷா யோகா மையத்தை தேடி வர காரணம் இதுவா?
  • PublishedMarch 14, 2024

கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், ஆன்மீகவாதிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தினம்தோறும், 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் இதனை, சத்குரு ஜக்கி வாசுதேவ் நிர்வகித்து வருகிறார்.

ஈஷா யோகா மையத்திற்கு, எந்த ஒரு பகட்டும்… பரபரப்பும் இன்றி பொதுமக்களை போல் மிகவும் சாதாரணமாக பல பிரபலங்களும் வந்து செல்வது உண்டு.

குறிப்பாக மகா சிவராத்திரி என்றால், நடிகை தமன்னா, அமலாபால், பூஜா ஹெக்டே, சந்தானம், சங்கர் மகாதேவன், காஜல் அகர்வால், என பல பிரபலங்கள் வருடம் தோறும் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த வருடமும் மகா சிவராத்திரி அன்று நடிகை தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம் ஆகியோர் விடிய விடிய நடந்த பூஜைகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது.

நடிகர் – நடிகைகள் மட்டும் இன்றி பல்வேறு அரசியல்வாதிகளும் ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டனர்.

இப்படி பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஈஷா யோகா மையத்திற்கு வருவது குறித்து, நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் இவர் கூறியுள்ளதாவது,

எப்போதும் சச்சையான விஷயங்கள் எங்கு அதிகம் இருக்கிறதோ, அதை தான் நான் தேடுவேன். அப்படிதான் ஏதாவது கிடைக்குமா என்கிற நோக்கத்தில் ஈஷா யோகா மையத்திற்கு சென்றேன். ஆனால் அப்படி எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. மாறாக பாசிட்டிவ் வைப் தான் கிடைத்தது.

எவ்வளவு பணம், சொத்து போன்றவற்றை சேர்த்து வைத்தாலும், மனிதனுக்கு நிம்மதி என்பது மிகவும் முக்கியம். அந்த நிம்மதியை தேடி தான் பல நடிகர் – நடிகைகள் ஈஷா யோகா மையத்திற்கு வருகிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது என கூறியிருந்தார்.

எப்போதும் ஏதாவது பரபரப்பான விஷயத்தை பேசி, பலரிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் பயில்வான் இப்படி பேசியுள்ளதை பலரும் ஆச்சர்யமாக பார்த்து வருகிறார்கள். ஈஷா யோகா மையம் பல ஏக்கர் காடுகளை அழித்து, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தி கேள்வி குறி ஆக்கியுள்ளது என பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பொங்கி வருவதும் அவ்வப்போது பார்க்கமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *