திடீரென முடிவை மாற்றிய அஜித் குமார்

திடீரென முடிவை மாற்றிய அஜித் குமார்
  • PublishedMarch 27, 2023

நடிகர் அஜித் குமார் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரியவத்துள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித் குமார். கடந்த பொங்கல் அன்று இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்கயிருந்தார்.

இந்தத் திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக கமிட்டாகியும் திரைக்கதையில் எந்த ஒரு முன்னேற்றமும் செய்யப்படாததால் அவரை திரைப்படத்திலிருந்து நீக்கியது. தற்போது இந்த திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கயிருக்கிறார். இவரது ஒன்லைன் கதைக்கு ஓகே சொல்லியிருக்கும் அஜித் மொத்த கதையும் ரெடியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என தெரிவித்திருக்கிறார். லைக்கா நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறது.

இதன்படி ஏப்ரல் மாதம் சூட்டிங் தொடங்கி இந்த வருட இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இந்த வருட இறுதியில் அவர் பைக் டூர் செல்ல இருப்பதால் இவ்வாறாக திட்டமிட்டு இருக்கிறார். தற்போது அவரது தந்தை இறந்து விட்டதால் இந்தத் திட்டங்கள் எல்லாமே மாறி இருக்கின்றன. தற்போதுள்ள தகவல்களின்படி ஏகே 62 படத்திற்கான சூட்டிங் மே மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தினைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள லைக்கா நிறுவனம் படப்பிடிப்பினை அஜித் விரும்பும் தேதியில் ஆரம்பிக்கலாம் என சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து ஏகே 62 படப்பிடிப்பு திகதிகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *