விஜய்யை தொடர்ந்து சினிமாவுக்கு குட் பை சொல்கின்றாரா அஜித்குமார்?

விஜய்யை தொடர்ந்து சினிமாவுக்கு குட் பை சொல்கின்றாரா அஜித்குமார்?
  • PublishedMarch 18, 2024

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தான். இதில் சமகால நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு இடையே போட்டி இருக்க தான் செய்யும். அப்படி விஜய் – அஜித் இருவரது படங்களுக்கும் கோலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டி நிலவி வந்தது.

அதிலும் கடந்த ஆண்டு இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டது. ஆனால் மறுபடியும் அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா என்பது கேள்விக்குறி தான்.

ஏனெனில் நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி உள்ளதால், தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடித்து முடித்த பின்னர் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் கைவசம் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படம் உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 திரைப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் இனி அடுத்த தளபதி யார் என்கிற பேச்சு கோலிவுட்டில் ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் மற்றுமொரு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால், நடிகர் அஜித்தும் சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக முடிவெடுத்து இருக்கிறாராம். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த கையோடு, அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.

இப்படத்தின் பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடித்து முடித்ததும் சினிமாவிற்கு குட் பாய் சொல்ல உள்ளாராம் அஜித்.

நடிகர் அஜித்துக்கு சினிமாவை தாண்டி பைக் ரைடிங் செல்வதிலும் கிரேஷ் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி கடந்தாண்டு உலக பைக் சுற்றுலாவை தொடங்கிய அஜித், முதற்கட்டமாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி முடித்தார்.

இதற்கு அடுத்தபடியாக மியான்மர், பூட்டான் போன்ற நாடுகளில் பைக் பயணம் மேற்கொண்டார். அதன்பின் ஷூட்டிங்கில் பிசியானதால் உலக பைக் சுற்றுலாவை கிடப்பில் போட்டுள்ளார். தற்போது குட் பேட் அக்லி படப்பிடிப்பை முடித்ததும் அதை தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம் அஜித். இதனால் அப்படத்துக்கு பின் அவர் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *