பப்லுவுடன் பிரிவு… காரணத்தை போட்டுடைத்தார் ஷீத்தல்.. இதெல்லாம் ஒரு மேட்டராடா???

பப்லுவுடன் பிரிவு… காரணத்தை போட்டுடைத்தார் ஷீத்தல்..  இதெல்லாம் ஒரு மேட்டராடா???
  • PublishedMarch 18, 2024

நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

அவர் குறித்து கடந்த சில மாதங்களாக சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து பப்லுவுடன் உறவில் இருந்த ஷீத்தல் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்

90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்த அவர் பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார்.

ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்து எந்த விளக்கமும் பிருத்விராஜோ, ஷீத்தலும் கூறாமல் இருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷீத்தல் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

“எனது கடந்த கால வாழ்க்கையை பற்றி பலரும் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்கள் என் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் நடந்தவற்றை தெரிந்துகொள்ளாமல் தப்பு தப்பாக புரிந்திருக்கிறார்கள்.

பப்லுவும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம்.

எங்களது உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால் இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம். இரண்டு பேரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. ஆனால் இது இரண்டு பேரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *