அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் தீடீர் மரணம்!

அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் தீடீர் மரணம்!
  • PublishedApril 29, 2023

அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரும்  பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவருமான நிக் ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்கரவர்த்தி இன்று மரணம் அடைந்துள்ளார்.

தயாரிப்பாளர் சக்கரவர்த்தி கடந்த எட்டு மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் சிகிச்சையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்.

ஆனால் நோயின் வீரியம் அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த சில நாட்களாகவே அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி காலமானார்!-  Dinamani

அந்த வகையில் இன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். இன்று மாலை அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

தற்போது அவருடைய இறப்புச் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும்இ அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் ஆறுதல்களையும்இ இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *