வனிதாவின் கணவர் உயிரிழப்பு : காரணம் கேக்கும் நெட்டிசன்கள்!

வனிதாவின் கணவர் உயிரிழப்பு : காரணம் கேக்கும் நெட்டிசன்கள்!
  • PublishedApril 29, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார்.

இவருடைய சகோதரர் தான் நடிகர் அருண் விஜய். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையில் வனிதா பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.  இந்த திருமணம் இணையத்தில் பூதாகரமாக வெடிக்க தொடங்கிய நிலையில் சில மாதங்களிலேயே வனிதா பீட்டர் பாலை பிரிந்து விட்டார்.

அதாவது வனிதா திருமணம் செய்து கொண்ட போதே பீட்டர் பாலின் முதல் மனைவி பிரச்சனை செய்து வந்தார். இதனால் வனிதா கோர்ட் கேஸ் என அலைந்தார்.

Vanitha Vijayakumar BEATS up Peter Paul and throws him out of the house;  producer Ravindar confirms

மேலும் தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதாவுக்கு எதிராக தொடர்ந்து யூடியூப் சேனலில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். கடைசியில் பீட்டர் பாலின் சுயரூபம் அறிந்து வனிதாவே அவரை ஒதுக்கி வைத்து விட்டார். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக பீட்டர் பால் மது அருந்துவதாக வனிதாவை கூறியிருந்தார்.

இந்நிலையில் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் உள்ள பிரபலங்களுக்கு தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *