சாய் பல்லவியை ஃபோலோ செய்யும் அஜித்தின் வில்லன் நடிகர்!

சாய் பல்லவியை ஃபோலோ செய்யும் அஜித்தின் வில்லன் நடிகர்!
  • PublishedJune 6, 2023

சினிமாவை பொறுத்தவரை படிப்பு என்பது அத்தியாவசியமானது அல்ல. திறமையின் அடிப்படையில் அவர்களுக்கான அங்கீகாரமும், வரவேற்ப்பும் கிடைக்கிறது.

ஆனால் ஒருசிலர்,  அவர்கள் படித்த படிப்பு அல்லது பார்க்கும் வேலைக்கு சம்பந்தமே இல்லாமல் திடீரென சினிமாவுக்குள் நுழைந்து விடுவார்கள்.

அப்படி நமக்கு பிடித்த நிறைய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படிப்பு மற்றும் அவர்கள் செய்து வந்த வேலைகள் வெளியில் தெரியும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படியான ஒரு சில நடிகைகளில் தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர்தான் நடிகை சாய்  பல்லவி.

பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சாய் பல்லவி,  உண்மையில் ஒரு மருத்துவர். மருத்துவராக இருந்து கொண்டு நடனத்திலும்,  நடிப்பிலும் சிறந்து விளங்கிய இவர்தான் மலர் டீச்சராக வந்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.

அந்த வரிசையில் தற்போது மற்றொரு நடிகரும் சேர்ந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமலஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் போலீஸ் ஆக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பரத் ரெட்டி தான் அந்த நடிகர்.

இவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நடிகர் அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடித்த விசுவாசம் திரைப்படத்தில் வில்லனின் மகளுக்கு விளையாட்டு சொல்லித் தரும் கோச்சாக இவர் நடித்திருப்பார்.

அதேபோன்று இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் பரத் ரெட்டி. முதலில் தெலுங்கில் அறிமுகமாகிய இவர்இ தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *