”தன் வினை தன்னைச் சுடும் ” : விவேக்கிற்கு விரித்த வலையில், தானே விழுந்த வடிவேலு!

”தன் வினை தன்னைச் சுடும் ” : விவேக்கிற்கு விரித்த வலையில், தானே விழுந்த வடிவேலு!
  • PublishedJune 6, 2023

நகைச்சுவை என்றாலே நம் நினைவு வருவது இவர்களின் காமெடிகள் மட்டும்தான். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்கள் தான் விவேக் மற்றும் வடிவேலு.

இந்நிலையில் விவேக் குரூப்பை பிரிக்க வடிவேலு செய்த மட்டமான வேலை கேட்பவருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதாவது,  விவேக்கின் வளர்ச்சியை பொறுக்காது வடிவேலு அவரை போட்டியாக தான் நினைத்து வந்திருக்கிறார்.

தனித்தனி காமெடிகளில் கலக்கினாலும் இருவருக்கும் காமெடி குரூப்புகள் இருந்தன. இப்படியே சில காலம் போய்க் கொண்டிருக்கும் போது விவேக் குரூப் ஆட்களை எப்படியாவது தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார் வடிவேலு.

அவ்வாறு தன்னுடன் வேலை பார்க்கும் சக நடிகர்களுக்குமே பல குடைச்சல்கள் கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கி வந்தார். அப்படி பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன்,  கொட்டாச்சி போன்றவர்களுக்கும் இவர் வலை விரித்துள்ளார்.

இதைக் குறித்து தவசி படபிடிப்பில் என்னை நடிக்க விடாமல் வடிவேலு செய்ததாக கொட்டாச்சி இன்டர்வியூ ஒன்றில் தன் மனம் திறந்து கவலையை வெளிப்படுத்தினார். அவ்வாறு சக நடிகர்களின் வளர்ச்சியையும் பிடிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் வடிவேலு.

ஒரு கட்டத்தில் இவரைப் பற்றி அறிந்தவர்கள்  இவர் விரித்த வலையான டபுள் பேமெண்ட்,  ரெகுலர் சான்ஸ் எதையும் பொருட்படுத்த வில்லையாம். அவரவர் தன் மரியாதையை பெரிதாக நினைத்து இவரை பிரிந்து சென்று இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *