புதிய தொழில் தொடங்கும் அஜித் : இப்போ இதுதான் ட்ரெண்ட்!

புதிய தொழில் தொடங்கும் அஜித் : இப்போ இதுதான் ட்ரெண்ட்!
  • PublishedJune 6, 2023

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அவருடைய விடாமுயற்சி படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதோடு அப்படியே இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது வேறு ஒரு விஷயத்தில் தனது ஈடுபாட்டை செலுத்தி வருகிறாராம். அதாவது,  மோட்டார் பைக் மூலம் இந்தியாவை சுற்றி பார்க்க நினைப்பவர்களுக்காக ‘ஏகே மோட்டோ ரெய்டு’ என்ற சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறார்.

இதுதான் தற்போது இவருடைய படத்தை விட பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை தெரிந்ததிலிருந்து நிறைய பேர் எப்பொழுது இது ஆரம்பிக்கப்படும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இவருடைய புது பிசினஸ் பரபரப்பாக சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த தொழிலுக்காக இவர் முதலீடு செய்தது 11.4 கோடி மதிப்பிலான மொத்தம் பத்து பைக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறார்.

இந்த பைக்குகள் அனைத்தும் வந்தபின் அனைத்து வேலைகளும் வேகமாக தொடங்கப்படும். ஆனால் இதில் சேர்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு அதன் பின்னரே ஒருவர் ஒருவராக சேர்க்கப்படுவார்கள்.

அத்துடன் இதில் சேர்ந்து இந்தியா முழுவதும் சுற்றுவதற்கு ஒரு ஆளுக்கு 6 முதல் 8 லட்சம் வரை வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *