AK உடன் GV கூட்டணியா?
அஜித் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படத்தின் இயக்குநருடன் அஜித் மீண்டும் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அஜித் நடிக்கும் ரேஸிங் என்ற படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.எனினும் இது தொடர்பிலான அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே, அஜித்தின் கார் ரேஸ் பயணம் குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆவணப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.