சத்தம் இல்லாமல் அடங்கிய ஏகே 62 : நான்கு இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ள அஜித்!
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படம் இழுப்பறி நிலையில் உள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நான்கு இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி விக்ரம் வேதா படத்தை எடுத்த புஷ்கர் காயத்ரி இடம் முதலாவதாக அஜித் கதை கேட்டிருக்கிறார். இந்த இயக்குனர் ஒரு டான் கதையை கூறி இருப்பதாக தகவல்கள் வருகிறது.
அடுத்ததாக ஒரு திரில்லர் பாணியில் கார்த்திக் நரேன் ஒரு கதையை ரெடி செய்து அஜித்திடம் கூறியிருக்கிறாராம். அத்துடன் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆக்சன் திரில்லர் கதை ஒன்றை அஜித்திற்கு சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்துப் போனதால் இதற்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இது மட்டுமில்லாமல் மாயா இயக்குனர் அஸ்வினிடமும் அஜித் கதை கேட்டிருக்கிறார். இப்படி தொடர்ந்து கதையை மட்டுமே கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.