சீரியலில் களமிறங்கிய விஜயின் தந்தை!

சீரியலில் களமிறங்கிய விஜயின் தந்தை!
  • PublishedApril 7, 2023

தற்போது பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான்.

ஆரம்பத்தில் விஜயின் படங்கள் அவ்வளவாக எடுப்படாவிட்டாலும், அவரை வைத்து மீண்டும் மீண்டும் படங்கள் எடுத்து இன்று இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த காலங்களில் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் மிகப் பெரிய விரிசல் விழுந்தது என்றுக்கூட சொல்லாம்.  விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும் என சந்திர சேகர் ஆசைப்பட்டதாலோ, என்னவோ விஜய் அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

sac-radhika-cinemapettai

எவ்வாறாயினும் எஸ்ஏசி சந்திரசேகர் தற்போது சீரியில் களமிறங்கியுள்ளார்.  இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இதில் நடிகை ராதிகா,  விஜய்யின் நண்பர் சஞ்சீவ், நாகேஷின் மகன் ஆனந்த் பாபு,  ரேஷ்மா, அஸ்வினி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த சீரியலை ராதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரடான் மீடியா தயாரிக்கிறது.

sac-kezhaku vaasal-serial-cinemapettai

இந்த சீரியலின் முதல் நாள் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ஆகையால் கிழக்கு வாசல் சீரியல் குழுவினர்களின் குரூப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. விரைவில் இந்த சீரியலின் ப்ரோமோவும் விஜய் டிவியில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *