லியோவில் ரோலக்ஸை மிஞ்சும் கதாபாத்திரம் : முக்கிய ஹீரோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய லோகேஷ்!

லியோவில் ரோலக்ஸை மிஞ்சும் கதாபாத்திரம் : முக்கிய ஹீரோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய லோகேஷ்!
  • PublishedApril 7, 2023

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படத்தில், முக்கியதுவம் பெற்ற கதாபாத்திரமாக ரோலக்ஸ் அமைந்திருந்தது. அந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம்.

இந்நிலையில், அந்த கதாபாத்திரத்தை மிஞ்சும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை லியோ படத்தில் வைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதாம். தனுஷ் கதை கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டாராம்.

மேலும் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற இருக்கிறது.

இதற்காக செட் போடும் பணி தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ள இருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் லியோ படத்தில் தனுஷ் நடிக்க உள்ள செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *