“1 + 1 = 3” அழகிய படங்கள் மூலம் அமலா பால் கொடுத்த இன்ப அதிர்ச்சி

“1 + 1 = 3” அழகிய படங்கள் மூலம் அமலா பால் கொடுத்த இன்ப அதிர்ச்சி
  • PublishedJanuary 5, 2024

பிரபல நடிகை அமலா பால் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக சமூக வலைதலங்களில் அறிவித்துள்ளார்.

நவம்பரில் அமலா பாலுக்கு திருமணம் நடந்த நிலையில் 2 மாதங்களில் அவர் கர்ப்பத்தை அறிவித்துள்ளார்.

2010 இல் வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அமலா பால்.

இவருக்கு தெய்வத் திருமகள், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை அளித்தன.

விஜய்யுடன் இவர் தலைவா படத்தில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். அதே படத்தை இயக்கிய ஏ.எல். விஜய்க்கும் அமலா பாலுக்கும் காதல் ஏற்பட இருவரும் 2014 இல் திருமணம் முடித்தனர்.

பிரபல தமிழ் சினிமா ஜோடியாக இருந்து வந்த இருவரும் 2017-இல் பிரிந்தனர். இதன்பின்னர் சில பிரபலங்களுடன் அமலா பால் இணைத்து பேசப்பட்டு வந்தார்.

சில சர்ச்சைக்குரிய படங்களிலும் நடித்தார், அதேபோல் சர்ச்சைககுரிய பதிவுகளாலும் அசிங்கப்பட்டார்.

இந்த நிலையயில் அமலா பால் நவம்பர் மாதம் தனது நண்பரை திருமணம் முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *