“நான் மட்டும் இல்ல.. என் கணவரும் கர்ப்பமா இருக்காரு..” என்னவா இருக்கும்?

“நான் மட்டும் இல்ல.. என் கணவரும் கர்ப்பமா இருக்காரு..” என்னவா இருக்கும்?
  • PublishedJanuary 14, 2024

பிரபல நடிகை அமலா பால் இப்பொது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தனது கணவரும் இப்பொது கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு ‘வீரசேகரன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் அமலா பால். ஆனால் அறிமுகமான துவக்கத்திலேயே சர்ச்சை நாயகியாக மாற்றியது ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தான்.

இப்படத்தில் நடித்ததற்காக அமலா பாலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதே நேரம் நெகடிவ் விமர்சனங்களால் மிகவும் பிரபலமடைந்தார் அவர்.

இந்த சூழலில் தான் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த ‘மைனா’ திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இன்றளவும் பல நேர்காணல்களில் இவர் தனது முதல் திரைப்படமாக குறிப்பிடுவது “மைனா” திரைப்படத்தை தான் என்றால் அது மிகையல்ல.

இதனையடுத்து ‘மைனா’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகியாக மாறினார் அமலா பால், அடுத்தடுத்து சிறந்த கதைக்களம் கொண்ட படங்களையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார் அவர். இந்த சூழலில் தான் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘தலைவா’ படத்தில் நடித்தார்.

தொடர்ந்து பல நல்ல படங்களில் நடிக்க துவங்கிய அமலா பாலுக்கும், இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் விவாகரத்தும் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி, அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்து லிப்லாக் கொடுத்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். இந்த சூழலில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இப்போது தான் மட்டுமல்ல தனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் அமலா.

ஒரு பெண் கர்ப்பம் அடையும் பொழுது அந்த கர்ப்பத்தை தனது கணவரும் தாங்குகிறார் என்ற அர்த்தத்தில் அவர் கூறியுள்ளார் என்று பலரும் நினைத்த நிலையில், அவர் கணவருக்கு வந்துள்ள குட்டித் தொப்பையை மேற்கோளிட்டு அவரும் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் கூறியுள்ளது சிரிப்பலைகளை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *