கமல் – மாயா பற்றி மோசமான பேச்சு.. கண்கலங்கி மன்னிப்பு கேட்ட விஜய் பிரபலங்கள்…

கமல் – மாயா பற்றி மோசமான பேச்சு.. கண்கலங்கி மன்னிப்பு கேட்ட விஜய் பிரபலங்கள்…
  • PublishedJanuary 14, 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்தும் விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அந்த அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில் கொண்டாட்டங்களுடன் தொடங்கும் பிக் பாஸ் போட்டியின் இறுதி நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கொண்டாட்டங்களின் நிறைவாக வெற்றியாளரும் அறிவிக்கப்படுவார். முன்னதாகவே பிக் பாஸ் வெற்றியாளர் அர்ச்சனா தான் என்ற தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது.

இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான மாயா குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. அவர் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் என்பதற்காக மாயாவிற்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாகவும், மாயாவும், கமலும் ஒரே ஜாதி பின்புலம் கொண்டவர்கள் என்பதால் கமல் ஜாதி ரீதியாக ஜாதி ரீதியிலான ஆதரவு கொடுப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில இருவர் குறித்தும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், துபாயில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான புகழ் மற்றும் குரோஷி கலந்து கொண்டனர். அந்த வீடியோவில் புகழ் கேட்கும் கேள்விகளுக்கு பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் குரேஷி கமல்ஹாசன் போல பேசிப பதில் அளித்திருந்தார்.

அதில் உங்களுக்கும் மாயவுக்கும்..என்று புகழ் கேட்க அது ஒன்றும் கிடையாது என்று சர்ச்சைக்குரிய வகையில் குரேஷி பதில் கூறினார். தொடர்ந்து சென்னையில் பிடிச்ச இடம்? மாயாஜால், புடிச்ச படம்? மாயா பஜார், தமிழ்நாட்டில் புடிச்ச இடம்? மாயா வரம் என்று கமல்ஹாசனை கிண்டலடிக்கும் வகையில் இருந்தது. இதனால், கடுப்பான கமல் ரசிகர்கள் இதெல்லாம் காமெடியா, நகைச்சுவைக்கும் ஓர் எல்லை இருக்கு என்று புகழ் மற்றும் குரோஷியை வெளுத்து வாங்கினார்கள்.

சோஷியம் மீடியாவில் புகழ் மற்றும் குரோஷி பேசியதற்கு படு மோசமான விமர்சனம் வந்ததை அடுத்து இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். அதில், நானும், குரேஷியும் துபாயில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டில் இருந்த கருத்துகள் கமல் ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இனி வரும் காலங்களில் அதுபோல் செய்யமாட்டோம். நாங்கள் செய்தது பெரிய தவறுதான். இதற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *