CSK அணிக்கு தீம் சோங் பண்ணித்தர முடியாது என பிடிவாதம் பிடித்த அனிருத்!

CSK அணிக்கு தீம் சோங் பண்ணித்தர முடியாது என பிடிவாதம் பிடித்த அனிருத்!
  • PublishedJune 5, 2023

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் ஐந்தாவது முறையாக தோனி தலைமை வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. இதனைய கண்டுகளிக்க ஏராளமானவர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இதன்போது பிரபல இசையமைப்பாளரான அனிருத் செய்தியாளர்களிடம் கூறிய கருத்தொன்று வைரலாகி வருகிறது.

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தீம் சாங் கம்போஸ் பண்ணும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்தும் அதை அவரே நிராகரித்த சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

2010 ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு சிஎஸ்கே அணிக்கான விசில் போடு பாடல் வெளியாகி பட்டித் தொட்டியெங்கும் வைரலானது.

இதனிடையே 2018 புதிதாக காம்பேக் தீம் சாங் கம்போஸ் பண்ணுமாறு அணியின் குழுவினர் அனிரூத்திடம் ஒரு கோடி வரை சம்பளமாக கொடுத்துள்ளனர்.

ஆனால் தன்னால் சிஎஸ்கே அணிக்கு தீம் சாங் பண்ணமுடியாது என கூறிய அனிரூத் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

அதாவது தீவிர தோனியின் ரசிகனான தனக்கே ஏற்கனவே வந்த விசில் போடு பாடல் பிடித்தது என்றும் அதற்கு நிகராக தன்னால் மற்றொரு தீம் சாங் ரெடி பண்ண முடியாது என கூறினாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *