நடிகை மோனலின் மரணத்திற்கு இவர்தான் காரணமா? : வெளியாகிய அதிர்ச்சி உண்மை!

நடிகை மோனலின் மரணத்திற்கு இவர்தான் காரணமா? : வெளியாகிய அதிர்ச்சி உண்மை!
  • PublishedJune 5, 2023

சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகைகளின் மரணம் என்பது இன்றுவரை விளக்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது.

நடிகை சில்க் ஸ்மிதா தொடங்கி  சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட வி ஜே சித்ரா வரை ஏன் இறந்தார்கள்,  இறப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது கடைசி வரை வெளியில் தெரியாமலேயே மூடி மறைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட மரணத்தை தழுவிய நடிகைகளில் ஒருவர் தான் மோனல். நடிகை மோனல் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் கால் பதித்து கடகடவென வளர்ந்து வந்த நடிகை ஒருவர் இப்படி தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இவருடைய மரணத்திற்கும் இன்று வரை விடை தெரியவில்லை.

மோனல்,  நடிகர் குணால் உடன் தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டிருந்ததால் இருவரும் காதலித்து ஏற்பட்ட பிரச்சனையால் அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் கூட கிளம்பின. ஆனால் நடிகை சிம்ரன் எல்லா உண்மையையும் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

நடிகை மோனலின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் நடன இயக்குனர் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா. மோனலும்,  பிரசன்னாவும் ஒருவருக்கொருவர் காதலித்திருக்கிறார்கள்.

வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரசன்னா மோனலின் உறவை துண்டித்துக் கொண்டார். இதனால் தான் மோனல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் மோனல் மரணம் அடைந்த நேரத்தில் சிம்ரன் கலா மாஸ்டர்,  அவருடைய தம்பி பிரசன்னா மீது வழக்கு பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *