வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்
  • PublishedJune 15, 2025

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் அனிருத். 16 வயதில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் தன் இசையை மக்களிடம் கொண்டு சென்றார்.

பல நடிகைகளுடனும் பாடகிகளுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பாடகி ஜோனிடா காந்தியை கூட திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

சமீபத்தில் பல ஆயிரம் கோடி சொத்துள்ள வாரிசை கல்யாணம் செய்யவுள்ளார் என்ற செய்தியும் பரவியது. இந்த வதந்தி செய்திகளுக்கு எல்லாம் அனிருத் ஒரு பதிவினை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அவரது எக்ஸ்தள பக்கத்தில், கல்யாணமா? சிரித்தபடி, தயவு செய்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் அனிருத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *