பொம்மை வாங்க கூட காசு இல்லை…இப்போது பாக்ஸ் ஆஃபிஸ் குயினாக மாறிய நடிகை

பொம்மை வாங்க கூட காசு இல்லை…இப்போது பாக்ஸ் ஆஃபிஸ் குயினாக மாறிய நடிகை
  • PublishedJune 15, 2025

நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமாகி, பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

தற்போது, தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

தற்போது முன்னணி நடிகையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை ராஷ்மிகா சிறு வயதில் ஒரு பொம்மை வாங்க கூட காசு இல்லாமல் இருந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், அவருடைய குழந்தைப் பருவம் மிகவும் சவால்கள் நிறைந்ததாக இருந்துள்ளது. இவரது குடும்பம் நிலையாக ஒரு வீட்டில் இருந்தது கிடையாது.

வாடகை செலுத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து அடிக்கடி அவர்கள் குடும்பமாக வீடு மாறிக்கொண்டே இருந்துள்ளார்கள்.

இது போன்ற சூழலில் வாழ்ந்த நடிகை ராஷ்மிகா தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் குயினாக ரூ 300 கோடி வசூல் செய்து பல கோடி சம்பளம் பெரும் நடிகையாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *