ஒரு பெட்டிக்குள் அடைபடாமல் இருப்பதே சுந்தந்திரம்…சமந்தா ஓபன் டால்க்

ஒரு பெட்டிக்குள் அடைபடாமல் இருப்பதே சுந்தந்திரம்…சமந்தா ஓபன் டால்க்
  • PublishedJune 15, 2025

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா நடிப்பில் அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடர் உருவாகவுள்ளது. மேலும் பங்காராம் எனும் படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார்.

இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை சமந்தா காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. சமீபத்தில் சமந்தா துபாய் சென்றிருந்தார். அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கூட இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அங்கு தனது காதலரோடு தான் சமந்தா சென்றுள்ளார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டி ஒன்றில், அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“நான் இப்போது வெற்றியை சுந்தந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன். இரண்டு ஆண்டுகளாக என் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. வளர்ச்சி அடைவதும், முதிர்ச்சி அடைவதும்தான் சுதந்திரம். முக்கியமாக ஒரு பெட்டிக்குள் அடைபடாமல் இருப்பதே சுந்தந்திரம் என்பது இப்போது எனக்கு புரிந்திருக்கிறது.

நான் முன்பு போல் இப்போது வெற்றி பெறவில்லை என்று என்னை சுற்றி இருப்பவர்கள் நினைக்கலாம். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நான் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் அதிக வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறன். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஏனென்றால் நான் செய்யும் பல வேலைகள் எனக்கு நிம்மதியை தருகிறது” என கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *