அஞ்சலியின் 50 ஆவது திரைப்படம் : இணையத்தை தெறிக்கவிட்ட போஸ்டர்!
ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி, திரைத்துறையில் 17 ஆவது வருடத்தில் காலடி எடுத்துவைத்துள்ளார்.
இந்நிலையில், அஞ்சலியின் 50-வது படமான ஈகை என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை அசோக் வேலாயுதம் இயக்குகிறார், படத்திற்கு தருண் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை கிரீன் அமியூஸ்மென்ட் மற்றும் டி3 ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.