என் பெற்றோர்களுக்கு தெரியாம இதை செய்வேன்…அனுபமா
பிரேமம் படத்தில் சுறுட்டை முடியை காட்டி நடித்து மக்களை கவர்ந்தவர் தான் அனுபமா.
மலையாளம், தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார். தற்போது அவர் கிஷ்கிந்தாபுரி என்ற படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

ஹாரர் படங்கள் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும், நான் சிறுவயதில் இருக்கும்போது ரகசியமாக பேய் படங்களை பார்ப்பேன்.
என் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு, ஹாரர் படங்களைப் பார்ப்பேன், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பார்ப்பேன் என்றார்.