தமிழ் சினிமாவில் இப்படியும் சில நடிகைகளா? : அன்றுமுதல் இன்றுவரை உச்சத்தில் இருக்கும் நதியா!

தமிழ் சினிமாவில் இப்படியும் சில நடிகைகளா? : அன்றுமுதல் இன்றுவரை உச்சத்தில் இருக்கும் நதியா!
  • PublishedJune 10, 2023

இன்றைய சினிமா துறையில் போட்டி மனோநிலை அதிகரித்து விட்டது. வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகைகளும், படங்களில் தாராளம் காட்டும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில், ஆரம்ப காலத்தில் இருந்த சில நடிகைகள் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருந்துள்ளனர். அதாவது அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் நடித்து காட்டியுள்ளனர். அவ்வாறு உள்ள 5 நடிகைகளை பார்க்கலாம்.

நதியா : 90களில் முன்னணி நடிகைகள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. ரஜினிஇ பிரபுஇ சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நதியா ஜோடி போட்டு நடித்துள்ளார். ஆனால் தனது திறமையை மட்டுமே நம்பி படங்களில் நதியா நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலாகி இருந்த நதியா இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

தேவயானி : குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை தேவயானி.  தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை மட்டுமே காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

மோனிகா : குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனிகா.  இவர் பட வாய்ப்புக்காக எப்போதுமே அட்ஜஸ்ட்மென்ட் செய்ததில்லை. தன்னுடைய திறமைக்காக வரும் வாய்ப்புகள் மட்டுமே நடித்துவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்.

சுவலட்சுமி : விஜய்,  அஜித் போன்ற நடிகர்களுடன் சுவலட்சுமி ஜோடியாக நடித்துள்ளார்.  சுவலட்சுமி மார்க்கெட் இருக்கும் வரை நடித்துவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

கௌசல்யா : பல மொழி படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தவர் நடிகை கௌசல்யா. இவர் விஜய்இ அஜித்இ பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கௌசல்யாவை பொறுத்தவரையில் சினிமா பிரபலங்களின் விழாக்கள்,  பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ள மாட்டாராம்.

அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை மட்டுமே பயன்படுத்தி நடித்த கௌசல்யா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *