சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் : களத்தில் இறங்கிய பாலா!

சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் : களத்தில் இறங்கிய பாலா!
  • PublishedMarch 12, 2023

இயக்குனர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகிய திரைப்படம் வணங்கான். ஆனால் கதையில் இடைநடுவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் சூர்யாவிற்கு உகந்ததாக அமையாது என்பதால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். இருவரும் ஒருமனதாக பேசி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும், வணங்கான் படத்தை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என பாலா உறுதியாக இருந்தார். அதனால், அருண் விஜய்யிடம் சென்ற பாலா, தற்போது அவரை களத்தில் இறக்கிவிட்டார்.

இதன்மூலம் தான் நினைத்தபடி வணங்கான் படத்தை பாலா ரிலீஸ் செய்துவிடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கொடுத்துள்ள அப்டேட் இப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதன்படி அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட் என கேப்ஷன் கொடுத்து இயக்குநர் பாலாவை டேக் செய்துள்ளார்.

மேலும், இதில் அருண் விஜய் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *