பத்து தல திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு : வெளியாகிய சூப்பர் அப்டேட்!

பத்து தல திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு : வெளியாகிய சூப்பர் அப்டேட்!
  • PublishedMarch 12, 2023

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் பத்துதல என்ற பெயரில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் திகதி சென்னையில் நடக்க உள்ளது.
சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில் படத்தின் 2வது பாடலான ‘நினைவிருக்கா’ என்ற பாடல் மார்ச் 13ம் திகதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *