சித்தப்பாவின் கால்மாட்டிலேயே கண்ணீருடன் நின்ற அதர்வா.. வைரலாகும் காட்சி

சித்தப்பாவின் கால்மாட்டிலேயே கண்ணீருடன் நின்ற அதர்வா.. வைரலாகும் காட்சி
  • PublishedMarch 30, 2024

அப்பாவை போலவே சித்தாப்பாவும் சீக்கிரமே உயிரிழந்த சோகத்தில் நடிகர் அதர்வா மற்றும் அவரது தம்பி ஆகாஷ் இருவரும் டேனியல் பாலாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

கருப்பு நிற சட்டை, தாடி, கண்ணாடியுடன் ஆளே வித்தியாசமாக மாறிய தோற்றத்தில் நடிகர் அதர்வா தனது சித்தப்பா டேனியல் பாலாஜியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டார்.

கடந்த 2010ம் ஆண்டு மே 19ம் தேதி 46 வயதிலேயே நடிகர் முரளி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. முரளியின் அம்மாவின் சகோதரி மகனான டேனியல் பாலாஜியும் தற்போது 48 வயதான நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், தனது சித்தப்பா டேனியல் பாலாஜி மறைந்த செய்தியை அறிந்ததும் தம்பியுடன் வந்த அதர்வா சித்தப்பா கால்மாட்டிலேயே வெகு நேரம் நின்று கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *