அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நடிகர் டானியல் பாலாஜியின் உடல்… வெளியானது புகைப்படம்

அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நடிகர் டானியல் பாலாஜியின் உடல்… வெளியானது புகைப்படம்
  • PublishedMarch 30, 2024

வெள்ளித்திரையில் குறுகிய காலத்தில், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி… முன்னணி வில்லன் நடிகராக மாறிய டானியல் பாலாஜி ‘காக்க காக்க’,’வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’, ‘பைரவா’, ‘வட சென்னை’,’பிகில்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு, நேற்று அவருடைய வீட்டில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனைக்கு செல்லும் போதே இவரது நிலை மோசமாக இருந்ததே இவரின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

டானியல் பாலாஜியின், இந்த திடீர் மரணம் ஒட்டு மொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் இவரது உடல் தற்போது, அவர் பிறந்து வளர்ந்த, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், டானியல் பாலாஜியின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *