பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்..

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்..
  • PublishedMarch 30, 2024

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

சித்தி என்ற சின்னத்திரை மூலம் நடிகராக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி(48). இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பைரவா உள்ளிட்ட பல்வேறு படிங்களில் படித்துள்ளார். இவருக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளே உள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த போது டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

டேனியல் பாலாஜியின் இறப்பு செய்தி திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *