பாலிவூட்டில் அடுத்தடுத்து ஹிட் அடிக்கும் அட்லி!! தமிழுக்கு டா.. டா… காட்டினாரா?

பாலிவூட்டில் அடுத்தடுத்து ஹிட் அடிக்கும் அட்லி!! தமிழுக்கு டா.. டா… காட்டினாரா?
  • PublishedMay 16, 2023

தமிழில் விஜய் உடன் மூன்று முறை கைகோர்த்த அட்லீ இப்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நயன்தாராவும் பாலிவுட் திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மேலும் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அது மட்டுமின்றி 220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் அளவுக்கு வசூல் பெறும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் ஆயிரம் கோடி வசூலித்து மாஸ் காட்டிய நிலையில் இப்படத்தையும் பாலிவுட் திரையுலம் அதிகமாக கவனித்து வருகிறது.

அதாவது வரும் செப்டம்பர் மாதம் ஜவான் வெளியாக இருக்கும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பட குழு இப்போது இறுதி கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க அட்லீ பாலிவுட்டில் தன் அடுத்த அஸ்திவாரத்தை போடுவதற்கும் தயாராகியுள்ளார்.

அதற்கான பேச்சுவார்த்தையில் இருந்த அவர் இப்போது இளம் ஹீரோவான வருண் தவானை வைத்து படம் இயக்குவதற்கு ரெடியாகிவிட்டார்.

இந்தக் கூட்டணி தற்போது உறுதியாகிவிட்ட நிலையில் அட்லீ தான் இயக்கிய தமிழ் படத்தை தான் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அந்த வகையில் விஜய், சமந்தா நடிப்பில் வெளிவந்த தெறி படம் 150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

ராஜா ராணி பட வெற்றிக்கு பிறகு அட்லீ தன் இரண்டாவது படத்திலேயே அதிக கவனம் ஈர்த்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து தளபதியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சென்டிமென்ட்டின் அடிப்படையிலேயே இப்படத்தை ஹிந்தியில் எடுக்க இருக்கிறாராம். அந்த வகையில் அட்லீ இப்போது கோலிவுட்டுக்கு மொத்தமாக டாட்டா காட்டியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *