குழந்தை ராமரை பார்க்க படையெடுத்து வந்த பிரபலங்கள்…. அட இவங்களுமா?? நீங்களே பாருங்க

குழந்தை ராமரை பார்க்க படையெடுத்து வந்த பிரபலங்கள்…. அட இவங்களுமா?? நீங்களே பாருங்க
  • PublishedJanuary 23, 2024

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட 5 வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கருவறையில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் படி பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் மோடி செய்தார். இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் சிரித்த முகத்துடன் தெய்வீகமாக பார்வையில் காட்சி அளித்தார்.

நேற்றைய தினம் கோவில் கும்பாபிஷேகம் முடிந்தாலும் கூட பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்.

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், ரஜினிகாந்த், தனுஷ்,சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் கங்கனா ரனாவத், பிடி உஷா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே, மிதாலி ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அவ்வாறு கலந்துகொண்டவர்களின் படங்கள் கீழே பார்க்கலாம்…

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *