ஹாலிவூட்டின் 16 வயதான இளம் நடிகர் வீதி விபத்தில் பலி

ஹாலிவூட்டின் 16 வயதான இளம் நடிகர் வீதி விபத்தில் பலி
  • PublishedDecember 27, 2024

ஹாலிவூட்டில் பேபி டிரைவர் (baby driver) திரைப்படத்தில் நடித்துப் பிரபலமான ஹட்சன் மீக் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அலபாமாவின் வெஸ்டாவியா – ஹில்ஸ் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த 16 வயதான மீக், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேபி டிரைவர் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹட்சன் மீக் ஆவார்.

அதன்பின், ஹட்சன் மீக் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விபத்து குறித்து வெஸ்டாவியா – ஹில்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹட்சன் மீக்கின் உயிரிழப்பு அவரது இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *