ஆண்டவர் செய்யாததை ஒரே எபிசோடில் செய்து காட்டிய மக்கள் செல்வன்

ஆண்டவர் செய்யாததை ஒரே எபிசோடில் செய்து காட்டிய மக்கள் செல்வன்
  • PublishedOctober 13, 2024

இதுவரை நடந்த பிக் பாஸ் சீசனை கமல் தொகுத்து வழங்கியது தான் பெஸ்ட், அதனாலதான் இவ்வளவு வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது என்று மக்களிடம் ஒரு கருத்து இருந்தது. ஆனால் தற்போது மக்கள் ஆரவாரத்துடன் விஜய் சேதுபதியை வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரே எபிசோடில் பெயரும் புகழும் வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் ஒரு விஷயம் தவறு என்று தெரிந்து விட்டால் அதை உடனே தட்டிக் கேட்கும் விதமாக பளிச்சென்று அவருடைய எதார்த்தத்தின் மூலம் கேள்வி கேட்டு விடுகிறார்.

அது மட்டுமா ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் அதை குளறுபடி இல்லாமல் குழப்பம் இல்லாமல் தெளிவான பதிலுடன் போட்டியாளர்களையும் மக்களையும் உற்சாகப்படுத்தி விட்டார்.

இன்னும் சொல்லப்போனால் பாரபட்சமே பார்க்காமல் எல்லா போட்டியாளர்களும் சமம் என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரையும் வறுத்தெடுக்கும் விதமாக அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி விட்டார்.

அத்துடன் இப்பொழுதுதான் சரியாக சொல்ல வேண்டுமென்றால் பிக் பாஸில் இருந்து யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதற்காக விஜய் சேதுபதி கண்ணுக்கு யாரும் தப்பிட முடியாது என்பதற்கு ஏற்ப நுணுக்கங்களை தெரிந்து அதன்படி கேள்வி கேட்கிறார்.

அந்த வகையில் யாரையுமே விட்டு வைக்கலை, எல்லோரையுமே கேள்வி கேட்டு அவர்களுடைய ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்து விட்டார்.

அதிலும் ஜாக்லின் பதிலளிக்கும் விதம் சற்று முகம் சுளிக்கும் அளவுக்கு இருப்பதை தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி நேக்காக ஜாக்லின் இடம் பேசி தனக்கான மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும். ஏனென்றால் நான் மக்களின் பிரதிநிதி என்பதற்கு ஏற்ப வாதாடி தட்டிக் கேட்டு விட்டார்.

ஆக மொத்தத்தில் இதுவரை ஏழுசீசன் களையும் கமல் தொகுத்து வழங்கியதை மறக்கடிக்கும் விதமாக விஜய் சேதுபதி அவருடைய எதார்த்தமான பாணியில் மாஸ் கட்டி விட்டார். அந்த வகையில் விஜய் சேதுபதி பிக் பாஸில் தொடர்ந்து தொகுத்து வழங்கும் விதமாக அவருக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதை பார்த்த ஒவ்வொரு போட்டியாளர்களும் வாய எடுத்து போய் நிற்கும் அளவிற்கு அரண்டு போய் நிற்கிறார்கள்.

நீ ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பயத்துடனும் ஏதாவது தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாறுமாறாக விளையாடுவதற்கு தயாராகி விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *