முத்தையா மகனுக்கு வில்லனாகும் பரத் – என்ன இப்படி இறங்கிட்டாரே…

முத்தையா மகனுக்கு வில்லனாகும் பரத் – என்ன இப்படி இறங்கிட்டாரே…
  • PublishedMarch 10, 2024

நடிகர் பரத் தன்னுடைய முதல் படத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் நடித்து ஏராளமான வரவேற்பை பெற்றவர். தொடர்ந்து காதல், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் முடங்கினார்.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத நிலையில் சமீபத்தில் வாணி போஜனுடன் இணைந்து நடித்த லவ் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் அவரது மகன் மற்றும் புதுமுகங்கள் நடித்து வரும் படத்தில் பரத் வில்லனாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக செல்லமே மற்றும் கடுகு ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள பரத் மூன்றாவது முறையாக இந்த படத்தில் வில்லனாக கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திணறிவரும் பரத்திற்கு கிராமத்து கதைக்களத்தில் உருவாகிவரும் முத்தையாவின் படம் சிறப்பான வில்லன் கேரக்டரை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பள்ளி பருவ காதலை ஆக்சன் கதைகளத்தில் வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் முத்தையா. இந்நிலையில் இந்த படத்தில் தான் தற்போது வில்லனாக நடிகர் பரத் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *