ஆஸ்கர் விருது விழாவுக்கு முழு நிர்வாணமாக வந்தாரா ஜான் சீனா? வைரலாகும் வீடியோ

ஆஸ்கர் விருது விழாவுக்கு முழு நிர்வாணமாக வந்தாரா ஜான் சீனா? வைரலாகும் வீடியோ
  • PublishedMarch 11, 2024

96வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில், ஜான் சீனா ஆடை அணியாமல் வரவில்லை என்றும் நேக்கட் கலர் உள்ளாடை அணிந்தே வந்திருக்கிறார் என்கிற ரகசியம் புகைப்படமாகவே கசிந்து ரசிகர்களை மேலும், அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

யர்கோஸ் லந்திமோஸ் இயக்கத்தில் எம்மா ஸ்டோன் நடித்து வெளியான ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் ஓபன்ஹெய்மர் படத்தை தொடர்ந்து அதிக ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்கப், சிறந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஆஸ்கர் விருதுகளை அந்த படம் வென்றது.

Poor Things படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க வித்தியாசமா பண்றேன் என்கிற பெயரில் ஜான் சீனா ஆடை அணியாமல் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

உலகளவில் ஜான் சீனாவை வைத்து அகாடமி விருதுகள் குழு இவ்வளவு சீப்பான ஸ்டன்ட்டை ஆஸ்கர் விருது விழாவில் பண்ண வேண்டுமா? தப்பித்தவறி அந்த கார்டு விலகியிருந்தால் அவருடை முக்கிய உறுப்பு ஃபிளாஷ் ஆகியிருந்தால் கெஸ் ஆகியிருக்குமே என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், உள்ளாடை அணியாமல் ஒன்றும் ஜான் சீனா ஆஸ்கர் மேடையில் ஏறவில்லை என்றும் நேக்கட் ஸ்கின் கலர் உள்ளாடையை அணிந்துக் கொண்டு கிட்டத்தட்ட நம்ம ஊர் கோவணம் போன்ற உடையை அணிந்துக் கொண்டு தான் ஆஸ்கர் மேடையில் அப்படியொரு ஆக்டிங்கை ஜான் சீனா கொடுத்துள்ளார் என்றும் இதோ பிஹைண்ட் தி சீன் போட்டோ என ஜட்டியுடன் ஜான் சீனா இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி ஆஸ்கர் ரகசியத்தை அம்பலமாக்கி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *