உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட அடிதடியில் இறங்கிய ஹீரோக்களின் ரசிகர்கள்..

உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட அடிதடியில் இறங்கிய ஹீரோக்களின் ரசிகர்கள்..
  • PublishedMarch 11, 2024

நம்ம ஊரில் தல – தளபதி ரசிகர்களை விட யாரும் சோஷியல் மீடியாவில் பயங்கர சண்டை போட்டு பார்த்திருக்க முடியாது. ஆனால், தெலுங்கு ரசிகர்கள் அதையும் தாண்டி பொது வெளியிலேயே சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் பிரபாஸ் ரசிகர் ஒருவரை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சேர்ந்து கொண்டு அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் பலரையும் கடுப்பாக்கி உள்ளது.

ஒரு நாயகன் உதயமாக வேண்டும் என்றால் ரசிகர் மன்றம் அவசியம். புதிய படங்கள் வெளியானால் கட் அவுட் வைப்பது பால் அபிஷேகம் செய்வது, கரன்ட் கம்பத்தில் ஷாக் அடித்து இறப்பது, லாரியில் நடனமாடிக் கொண்டே சாலையில் விழுந்து மரணிப்பது, சோஷியல் மீடியாவில் தனக்கு பிடிக்காத நடிகரின் குடும்பத்தையே ஆபாசமாக சித்தரித்து ட்ரோல் செய்வது என அனைத்தையும் செய்வது ரசிக மன்றத்தில் இருக்கும் ரசிகர்கள் தான் என்கின்றனர்.

அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டின் போது தமாஸாக பேச ஆரம்பித்து வாய்த்தகராறாக மாறிய நிலையில், பிரபாஸ் ரசிகர்களுக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் அடிதடை சண்டை வெடித்துள்ளது.

சட்டையை எல்லாம் கிழித்து ரத்தம் சொட்ட சொட்ட பிரபாஸ் ரசிகர் ஒருவரை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கும்பலாக சேர்ந்துக் கொண்டு அடித்து நொறுக்கும் காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன.

ஜெய் அல்லு அர்ஜுன் என சொல்லு என சொல்லி சொல்லி அடிப்பதை பார்த்தால் இளைஞர்களின் எதிர்காலம் எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்கிற கேள்வியை உருவாக்குகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக லோக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் நடிப்பில் அடுத்து கல்கி திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அதே போல அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 இந்த ஆண்டு வெளியாகிறது. இந்நிலையில், பிரபாஸ் ரசிகரை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மனசாட்சியே இல்லாமல் இப்படி அடித்து துன்புறுத்தியதை பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *