பவதாரிணி கடைசியாக இசையமைத்த படம் என்ன தெரியுமா? எமோஷனல் பேச்சு

பவதாரிணி கடைசியாக இசையமைத்த படம் என்ன தெரியுமா? எமோஷனல் பேச்சு
  • PublishedFebruary 1, 2024

பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவர் கடைசியாக புயலில் ஒரு தோணி என்ற படத்துக்கு இசையமைத்தார்.

இயக்குநர் ஈசன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படமானது விரைவில் வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் பவதாரிணி குறித்து ஈசன் எமோஷனலாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பவதாரிணி கடைசியாக புயலில் ஒரு தோணி என்ற படத்துக்கு இசையமைத்தார். படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஈசன் என்பவர் படத்தை இயக்க விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் என்ற புதுமுகங்கள் இதில் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர்.

இயக்குநர் ஈசன் பவதாரிணி குறித்து பேசுகையில்,

“பெண்களுக்கு ஒரு ஆதரவு குரலாக புயலில் ஒரு தோணி படம் உருவாகியிருக்கிறது. நான் இந்தக் கதையை தேர்வு செய்வதற்கு முன்னதாகவே பவதாரிணியைத்தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். நான் முழு படத்தையும் முடித்த பிறகு பவதாரிணியிடம் அதனை திரையிட்டு காண்பித்தேன். அவருக்கு படம் ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.

படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. அந்த இரண்டு பாடல்களையுக் கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார். இரண்டு பாடல்களையும் பவதாரிணி விரைவிலேயே கொடுத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை ஜிவி பிரகாஷும், மானசியும் பாடியிருக்கிறார். அதேபோல் கார்த்திக் ராஜாவும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

படத்துக்கான பின்னணி இசையை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்திருக்கிறார் பவதாரிணி. படம் வெளியாகும் முன்னரே அவர் இறந்துவிடுவார் என்று நாங்கள் துளியும் நினைத்துப்பார்க்கவில்லை.

அவர் இல்லை என்பதை இப்போதும் எங்களால் நம்ப முடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே அவர்தான். பவதாரிணி கிரீடத்தில் இருக்கும் வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *