காதல் கணவனை பிரிந்த ராஜ்கிரண் வளர்ப்பு மகள்… கண்ணீருடன் வெளியிட்ட செய்தி

காதல் கணவனை பிரிந்த ராஜ்கிரண் வளர்ப்பு மகள்… கண்ணீருடன் வெளியிட்ட செய்தி
  • PublishedFebruary 1, 2024

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

தற்போது ராஜ்கிரணின் மகள் பிரியா எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது என்று தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதோடு முனீஸ் ராஜா மற்றும் பிரியா வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகள் கிடையாது வளர்ப்பு மகள் தான் அந்த சின்னத்திரை நடிகர் என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதனை செய்திருகிறார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் ராஜ்கிரண் அதிரடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா வெளியிட்டுள்ள வீடியோவில் நானும் முனீஸ் ராஜா இருவரும் பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார். அதில், நானும் நடிகர் முனுஷ் ராஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை.

இப்போது நான் கணவருடன் இல்லை, இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறோம். இந்த திருமணத்தால் என்னை வளர்ந்த அப்பாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன். ஒன்னு இல்ல ரெண்டு இல்ல நிறைய கஷ்டப்படுத்திவிட்டேன். அப்படி இருந்தும் எனக்கு கஷ்டம் என்றதும் எனக்காக என் அப்பா வந்தார். இதற்காக எத்தனை முறை மன்னிப்பு கேட்டாளும் பத்தாது, என்னை மன்னிச்சிடுங்க என்று பிரியா கண்ணீர் மல்க பேசிஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *