தொடங்கியது பொம்மலாட்டம்.. ரவீனா – மணியால் கடுப்பாகும் ரசிகர்கள்..

தொடங்கியது பொம்மலாட்டம்.. ரவீனா – மணியால் கடுப்பாகும் ரசிகர்கள்..
  • PublishedDecember 5, 2023

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் ஐந்தாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் இந்த சீசனின் பொம்மலாட்டம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் சிலர் பொம்மையாக மாறி இருக்கிறார்கள்.

அதோடு சிலர் குழந்தைகள் போல சேட்டைகள் செய்கின்றனர். அப்போது ரவீனா செய்யும் செயலை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

குட்டி ஜெனிலியா என்று சொல்லும் அளவிற்கு ரவீனா குழந்தை போலவே அடிக்கடி சேட்டை செய்து கொண்டும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்.

இப்போது டாஸ்க்கில் அவருக்கு குழந்தை என்ற கேரக்டர் கொடுத்து இருப்பதால் அப்படியே கேரக்டராக மாறி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மணி மற்றும் ரவீனா இருவரும் கட்டி புரண்டு கொண்டிருக்க அது பார்க்கும் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

இதற்கு முந்தைய சீசன்களில் குழந்தைகளாக போட்டியாளர்கள் செய்யும் செயல்களை பார்க்கும்போது நம்மை அறியாமலே சிரிப்பு வந்துவிடும். ஆனால் இப்போது வாண்டடாக இவர்கள் செய்யும் செயல், ஏன் இந்த டாஸ்க் என்று சொல்ல வைப்பதாக சிலர் கமெண்ட்களில் தங்களுடைய வருத்தத்தை பார்க்க முடிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *