தலைவர் 170 படப்பிடிப்பில் ரித்திகா சிங்-கிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…

தலைவர் 170 படப்பிடிப்பில் ரித்திகா சிங்-கிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…
  • PublishedDecember 5, 2023

‘இறுதிச்சுற்று’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், படப்பிடிப்பின்போது ரித்திகா சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. “இதை பார்க்கும்போது நான் ஒரு ஓநாயுடன் சண்டையிட்டது போல் தெரிகிறது” எனக் கூறி புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.

பின்னர் படப்பிடிப்பின் போது என்ன நடந்தது என்பதை விவரிக்கும் வீடியோவைப் இன்ஸ்டாகிரா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், “நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். அங்கே கண்ணாடி இருக்கிறது; கவனமாக இருங்கள் எனக் கூறினார்கள். ஆனால், நான்தான் கேட்கவில்லை. சில நேரங்களில் நம்மால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது இல்லையா? நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். அதனால் இது நடந்தது” எனக் கூறினார்.

மேலும் அந்த விடியோவில், “நான் இப்போது எந்த வலியையும் உணரவில்லை, ஆனால் இதில் சில காயங்கள் மிகவும் ஆழமாக இருப்பதால் நிச்சயமாக வலிக்கும் என்று நம்புகிறேன். ஊசி போடுவதற்காக படப்பிடிப்பில் இருந்து மருத்துவமனைக்குச் செல்கிறேன். இது விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்’ எனவும் கூறியிருந்தார்.

எக்ஸ் பக்கத்தில் ஒருவர் ரஜினி 170 படத்தின் படப்பிடிப்பில்தான் இது நடந்ததாக பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *