லிப்லாக் காட்சிகளுடன் வெளியானது பொம்மை டிரெய்லர்..

லிப்லாக் காட்சிகளுடன் வெளியானது பொம்மை டிரெய்லர்..
  • PublishedJune 4, 2023

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தை இயக்க உள்ள இயக்குனர் வெங்கட் பிரபு இதனை வெளியிட்டுள்ளார்.

அபியும் நானும், பயணம், மொழி போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் ராதாமோகன்.

அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் பொம்மை.

REVEALED: SJ Surya and Priya Bhavani Shankar in Love? | Astro Ulagam

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

இருவரும் இதற்கு முன்னர் மான்ஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

பொம்மை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். நீண்ட நாடகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த பொம்மை திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Monster Tamil Movie Pics HD | SJ Suryah | Priya Bhavani Shankar | New ...

இந்த டிரைலரில் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி சங்கர் இடையேயான லிப்லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இதுவரை ஹோம்லி வேடங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், முதன்முறையாக லிப்லாக் காட்சியில் நடித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *