சப்தம் இல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு குழி வெட்டிய குடும்பம் : பல வருடங்கள் ஆகியும் காக்கப்படும் ரகசியம்!

சப்தம் இல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு குழி வெட்டிய குடும்பம் : பல வருடங்கள் ஆகியும் காக்கப்படும் ரகசியம்!
  • PublishedJune 4, 2023

பொதுவாகவே சிவகார்த்திகேயனுக்கு சினிமா துறையிலும் மற்றும் ரசிகர்களிடமும் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக சில விஷயங்கள் நடந்திருந்தாலும் கண்டு கொள்ளாமல் அவருடைய முழு கவனமும் நடிப்பதில் மட்டும் தான் இருந்திருக்கிறார்.

ஆனால் இவரை எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என்று குடும்பமாய் சதி செய்திருக்கிறார்கள். அதாவது நான்கு படங்களில் நடிப்பதற்கு பேசி கால்சீட் வாங்கியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிய தொகையை அட்வான்ஸாக பெற்றுள்ளார்.

ஆனால் பிறகு படத்தை தொடங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். அலட்சியமாக பதில் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தானாக நேரில் சென்று வேறு படங்களில் நடிக்கலாமா என்றுக் கேட்டுள்ளார். அதற்கு  அவர்கள் உங்கள் விருப்பம் போல் நடித்துவிட்டு வாருங்கள் என்று கொஞ்சம் அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார்கள்.

பிறகு சிவகார்த்திகேயன் வேற படங்களில் நடிப்பதற்கு போனால் அங்குள்ள தயாரிப்பாளர்கள் நீங்கள் ஏற்கனவே கமிட்டான படத்தை நடித்து முடித்துவிட்டு வாருங்கள். இல்லை என்றால் அதை ஒரேடியாக ரத்து செய்துவிட்டு வாங்க என்று கூறியுள்ளனர்.

இப்படியே அங்கேயும் இங்கேயும் தொடர்ந்து அவஸ்தைப்பட்டு இருந்திருக்கிறார். பிறகு தான் தெரிந்திருக்கிறது இது எல்லாம் இவருக்கு விரித்த சூழ்ச்சி வலை என்று. எதற்காக என்றால் இவர் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்பதற்காகவே சிவகார்த்திகேயனுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் தான் என்று தெரிய வந்துள்ளது. இறுதியாக இந்த பிரச்சினையில் இருந்து வெளிவந்துதான் தற்போது அவர் வேறு படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *