முரளி 800 திரைப்படத்தில் இணைந்த பிரிட்டிஷ் நட்சத்திரங்கள்!
கிரிகெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரணின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தில் அவுஸ்ரேலிய நடுவர்களாக பிரிட்டிஷ் நடிகர்கள் இருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முரளி 800 வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் எழுத்தாளரும், இயக்குனருமான ஸ்ரீபதியின் கூற்றுப்படி, பிரிட்டிஷ் நடிகர்களான பில் ஹர்ஸ்ட், மற்றும் பால் கோஸ்டா டாரல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து நட்சத்திர நடிகர்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், எடிட்டிங் உள்ளிட்ட ஏனைய பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இன்னும் ஓர்,இரு மாதங்களில் படம் வெளியாகும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
முரளியின் கிரிகெட் வரலாற்றில் 800ஆவது டெஸ்ட் கிரிகெட் போட்டி முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டிதான் படத்தின் முக்கிய கருபொருளாகவும் அமைந்துள்ளது.
ஆகவே படப்பிடிப்பு பணிகளும், இலங்கை, சென்னை, கொச்சின், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா உள்ளிட்ட இடங்களை மையப்படுத்திதான் எடுக்கப்பட்டுள்ளது.
முரளிதரன் சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தியை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ஆகவே இந்த பாத்திரத்தில் நடிகை மஹிமா நம்பியார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கேப்டன் அர்ஜுன் ரணதுங்க, கபில் தேவ் உள்ளிட்ட மிக முக்கிய கிரிகெட் வீரர்களின் கதாபாத்திரங்களை ஆசிய நாடுகளைச் சேர்ந்த நடிகர்களே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.