“வாம்மா மின்னல்…” பிரபல காமெடி நடிகரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டது

“வாம்மா மின்னல்…” பிரபல காமெடி நடிகரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டது
  • PublishedJune 15, 2023

முன்னணி காமெடி நடிகரான வடிவேலுவுக்கென்று தனி டீம் ஒன்று இருந்தது. அந்த டீமில் அல்வா வாசு, சிங்கமுத்து, பாவா லட்சுமணன், போண்டா மணி என பலர் இருப்பார்கள்.

இவர்களில் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுவுக்கும் முட்டிக்கொண்டது. அல்வா வாசு உயிரிழந்துவிட்டார். போண்டா மணி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டிருக்கிறார். பாவா லட்சுமணனும் முன்னர் போல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை.

வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர் பாவா லட்சுமணன்.

இப்படி ரசிகர்களை சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை சமீபகாலமாக சோகத்தில் இருக்கிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் பட வாய்ப்பே இல்லாமல் இருந்தது.

அதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட கூறியிருந்தார். இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்தது.

பட வாய்ப்புகள் ஏதுமின்றி பொருளாதார ரீதியாக நொடிந்து போயிருக்கும் பாவா லட்சுமணன் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்தவர். எனவே வடிவேலு பாவா லட்சுமணனை நேரில்கூட சந்திக்க வேண்டாம். அவரை தொலைபேசியிலாவது தொடர்புகொண்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி தன்னுடன் நடித்தவர்களை வடிவேலு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே அந்த அவப்பெயரை துடைக்கும் விதமாக பாவா லட்சுமணனுக்கு வடிவேலு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *