சகுனியாக நடிக்க வேண்டியவர் ராமனாக நடிப்பதா? : சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரனாவத்!

சகுனியாக நடிக்க வேண்டியவர் ராமனாக நடிப்பதா? : சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரனாவத்!
  • PublishedJune 15, 2023

கங்கனா ரனாவத் மிகவும் துணிச்சலான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார். இதற்கு இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமல்ல,  பாலிவுட்டில் உள்ள பிரபலங்களின் மீது வெளிப்படையாகவே பல குற்றச்சாட்டுகளை அடுக்கி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இப்போது பிரபல பாலிவுட் நடிகரை மறைமுகமாக கடுமையாக சாடி உள்ளார். காந்தியவாதி போல் பேசும் கங்கனா ரன்வீர் சிங்கை வம்புக்கு இழுத்துள்ளார்.

அதாவது ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதையாக ஆலியா பட் நடிக்கவிருக்கிறார். இது குறித்து கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது சினிமாவில் உள்ளவர்களைப் பற்றி மோசமாக பேசியே பிரபலமாகிய ஒருவர் மது,  மாது என எந்நேரமும் இருக்கக்கூடியவர். இப்படி போதைக்கு அடிமையான ஒருவர் ஒழுக்கயின்மைக்கு பேர் போன ராமராக நடிக்க கூடாது என கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அவருடைய குணம் மிகவும் மோசமானது என்பதால் துரியோதனன்,  சகுனி போன்ற கதாபாத்திரங்களில் தான் அவர் நடிக்க வேண்டும் என்று விமர்சித்திருக்கிறார்.

இப்போது கங்கனாவின் இந்த பதிவு இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *