சினிமாவில் அட்ஜஸ்ட் மென்ட் இருக்கத்தான் செய்கிறது : பிரியா பவானி சங்கர்!

சினிமாவில் அட்ஜஸ்ட் மென்ட் இருக்கத்தான் செய்கிறது :  பிரியா பவானி சங்கர்!
  • PublishedJune 15, 2023

முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சின்னத்திரை சீரியல் கதாநாயகியாக நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கிய பிரியா பவானி சங்கர்.

தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள  பிரியா பவானி சங்கரிடம் சுவாரசியமான பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

அந்தவகையில், அட்ஜஸ்மென்ட்டுக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக முதலில் பேச வேண்டும். அதைவிட முக்கியமானது அவர்கள் சொல்வதை இந்த சமூகம் முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும்.

அதே சமயம் தைரியமாக சொல்லும் பெண்கள் மீதே கடைசியில் பழி போடவும் தயங்குவதில்லை. நீ ஏன் இதை முன்கூட்டியே சொல்லவில்லை. இதில் உனக்கு உடன்பாடு இல்லை என்றால் எதற்கு ஒத்துக் கொண்டாய்,  வளர்ந்த பிறகு இப்போது வாய் திறக்கிறாயே என அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்பதை முதலில் நிறுத்துங்கள்.

அட்ஜஸ்ட்மெண்ட் செய்வது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக இந்த பிரச்சனையை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது.

பெண்கள் இந்த துறை அந்த துறை அல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களுக்கு உடல் ரீதியாக டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எது மாதிரி வேலை செய்கிறார் என்ற பாகுபாடு இல்லாமல் பல வழிகளில் பலான தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *