அட இவரா??? லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு பரபலம்!! யார் தெரியுமா?

அட இவரா??? லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு பரபலம்!! யார் தெரியுமா?
  • PublishedMay 17, 2023

லியோ படத்தை மெகா ப்ளாக்பஸ்டராக கொடுத்துவிட வேண்டும் என்பதில் லோகேஷ் கனகராஜ் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார்.

இதன் பல விஷயங்களை நிதானமாக செய்கிறார். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ப்ரதீப் முத்து இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் தனது ட்விட்டர் பயோவில் இதுவரை தான் நடித்த மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களுடன் லியோ படத்தையும் இணைத்திருக்கிறார். இதன் காரணமாக அவர் லியோவில் நடிக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

லியோ படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். ஷூட்டிங்கை முடித்துவிட்டு குட்டி ரெஸ்ட் எடுக்கும் விஜய் ஜூலை மாதத்தில் படத்துக்கான டப்பிங்கை பேசவிருக்கிறார் என கூறப்படுகிறது. லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *